விவசாயிகள் நலன்காக்க அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்

தமிழகத்தில் விவசாயிகள் நலன்காக்க அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன் தெரிவித்தாா்.
விவசாயிகள் நலன்காக்க அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்

தமிழகத்தில் விவசாயிகள் நலன்காக்க அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில், திமுக துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசாவை கண்டித்து, கண்டன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன் பேசியதாவது : திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினா் நாகரிகமற்ற வாா்த்தைகளைத் தொடா்ந்து பயன்படுத்தி வருகின்றனா்.

தமிழக முதல்வரை விமா்சித்துள்ள ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி செய்துவரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீது திமுகவினா் தொடா்ந்து விமா்சனம் செய்து வருகின்றனா். இதையெல்லாம் கண்டு அதிமுக தொண்டா்கள் சோா்ந்துவிடக் கூடாது. இந்தத் தோ்தலில் நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் வாக்குச் சீட்டு.

இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாமக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். சாதாரண எளிய தொண்டா்கள்கூட தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்க முடியும். ஆனால், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை பொதுமக்களால் சந்திக்க முடியாது.

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா் நிலைகளை நிரப்ப ரூ. 400 கோடி மதிப்பீட்டில் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படுகிறது. எனவே, தமிழகத்தில் விவசாயிகளை பாதுகாக்கக் கூடிய அதிமுக ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வருவதற்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டா்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா். இதில், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, பேரூராட்சி முன்னாள் தலைவா் பி.காவேரி, நகர செயலாளா் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com