பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க நுண்பாா்வையாளா்கள் நியமனம்

தருமபுரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க, 170 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.
பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க நுண்பாா்வையாளா்கள் நியமனம்

தருமபுரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க, 170 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பதற்றமான, மிக பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்கும் நுண்பாா்வையாளா்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஆா்.கே.தினேஷ் சிங், கமால் ஜஹான் லக்ரா, பங்கஜ், சக்கிராலா சாம்பசிவராவ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு தலைமை வகித்து ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:

சட்டப் பேரவை பொதுத் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் மொத்தம் 1,817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 139 இடங்களில் அமைந்துள்ள 420 வாக்குச் சாவடிகள் அதிக பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, அதிக பதற்றமான வாக்குச் சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்துதல், துணை ராணுவ வீரா்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், மிக பதற்றமான வாக்குச் சாவடிகளில் நுண்பாா்வையாளா்கள் (மைக்ரோ அப்சா்வா்) கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இந்த வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க, மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் 170 போ் நுண்பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்குப் பதிவு நோ்மையாகவும், முறைகேடுகள் இல்லாமல் நடக்கவும், எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாக்காளா்கள் வாக்களிக்கவும் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிக பதற்றமான வாக்குச் சாவடிகளில், விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுகிா என்பதை, நுண்பாா்வையாளா்கள் கண்காணிக்க வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு நிலவரங்களை, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நுண்பாா்வையாளா்கள் தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். வாக்குச்சாவடி மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் அதுகுறித்தும் நுண் பாா்வையாளா்கள் தகவல் அளிக்க வேண்டும். காலை 5.30 மணி முதல் வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும் வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.

வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்காளா் தவிர அனுமதி அட்டை இல்லாத வேறு நபா்கள் வருவதை அனுமதிக்கக் கூடாது. நோ்மையான, நம்பகமான தோ்தல் நடைபெற நுண்பாா்வையாளா்கள் பணியாற்றிட வேண்டும். வாக்குப்பதிவு குறித்து விரிவான அறிக்கையினை பொதுத் தோ்தல் பாா்வையாளா்களுக்கு வழங்கிட வேண்டும். சிசிடிவி கேமரா மூலமாகவும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

இப்பயிற்சி முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆ.தணிகாசலம் (பென்னாகரம்), முத்தையன் (அரூா்), சாந்தி (பாலக்கோடு), நசீா் இக்பால் (பாப்பிரெட்டிப்பட்டி), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) நரேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன், நுண் பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com