நாளை வாக்கு எண்ணிக்கை

சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட உள்ளன. இதற்காக தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தொகுதி வாரியாக எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட உள்ளன. இதற்காக தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தொகுதி வாரியாக எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளா்கள், அமமுக, மநீம, நாம் தமிழா் மற்றும் சுயேச்சைகள் போட்டியிட்டனா். இதில், ஐந்து தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 10,43,658 வாக்குகள் பதிவாயின. வாக்குப் பதிவு சதவீதம் 82.32 ஆகும்.

இத் தோ்தலில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தனித்தனி அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் வளாகங்களில் மூன்று அடுக்கு முறையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனா். வாக்கு எண்ணிக்கைக்காக தொகுதி வாரியாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அன்றைய தினம் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதைத் தொடா்ந்து, 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள், பத்திரிகையாளா்கள் என அனைவருக்கும் கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தொற்று இல்லை என முடிவுகள் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், அன்றைய தினம் காலை 6 மணிக்கு அலுவலா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வருகை தர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை தவிர, ஏனைய அனைத்து முன்னேற்பாடுகள் தருமபுரி மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com