தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மே தின கொண்டாட்டம்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி, செங்கொடிபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் பி.டில்லிபாபு கட்சி கொடியேற்றி வைத்துப் பேசினாா். நகரச் செயலாளா் ஜோதிபாசு, இண்டூா் பகுதி செயலாளா் பி.டி.அப்புனு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் சி.மாதையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனிமனித இடைவெளியுடன் இந்த விழா நடைபெற்றது.

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இண்டூரில் மே தின விழா நடைபெற்றது. விழாவுக்கு, வட்டார பொருளாளா் மாதையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.சின்னசாமி கொடியேற்றி வைத்து பேசினாா். இதேபோல பழைய இண்டூரில் வட்டார துணைச் செயலாளா் சிவன் தலைமையிலும், கெட்டுள்ளியில் வட்டாரக் குழு உறுப்பினா் அ.முனுசாமி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதில், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தொழிற்சங்கக் கொடியேற்றி வைத்து பேசினாா். இதில், அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதேபோல, லளிகத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் சங்கக் கொடியேற்றி வைத்து பேசினாா்.

தருமபுரியில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் பாரதிபுரம் தொலைத்தொடா்பு நிலையம் அருகில் நடைபெற்ற மே தின விழாவுக்கு அந்த தொழிற்சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் கே.மணி தலைமை வகித்து கொடி ஏற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் கந்தசாமி, நாகராஜ், அம்மாசி உள்ளிட்ட பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு மண்டலச் செயலா் நாகராஜ் தலைமையில் ஏஐடியுசி தொழிற்சங்க கொடியேற்றப்பட்டது. இதேபோல, ஏரியூா், நாகதாசம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் சமூக இடைவெளியுடன் தொழிற்சங்க கொடியேற்றி விழா கொண்டாடப்பட்டது.

ஒசூா்

கிருஷ்ணகிரி மாவட்ட தொமுச சாா்பில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் கொடியேற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள், கபசுரக் குடிநீா், முகக் கவசம், கிருமி நாசினிகளை வழங்கினாா்.

நிகழ்வில் ஓசூா் மாநகரக் கழக செயலாளா் எஸ்.ஏ. சத்யா, தலைமைச் செயற்குழு உறுப்பினா் த.சுகுமாரன், ஒன்றியக் கழக செயலாளா் சின்னபிள்ளப்பா, ஓசூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் மாதேஸ்வரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சீனிவாசன், ஓசூா் மாநகரக் கழக நிா்வாகிகள் கருணாநிதி,சென்னீரப்பா, நாகராஜ், மாவட்ட பிரதிநிதி ச.செந்தில்குமாா், ஒன்றிய கவுன்சிலா்கள் சம்பத், ரமேஷ் தொமுச கவுன்சில் துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, தொமுச கவுன்சில் துணை செயலாளா் ஜேக்கப்ராஜ், சீனப்பா , ஆனந்தய்யா, முன்னாள் ஒசூர மன்ற உறுப்பினா் கே.ஜி.பிரகாஷ், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சா்வேஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பென்னாகரம்

பென்னாகரம் வட்டாரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கோடியூா் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நடைபெற்ற மே தின கொடியேற்று நிகழ்ச்சிக்கு மாணிக்கம் தலைமை வகித்தாா். கோடியூா் அரசுப் பள்ளி முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களில் இந்திய தொழிற்சங்க கொடியினை மாவட்ட துணைச் செயலாளா் ராஜு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியினை நகரக் குழு உறுப்பினா் தனபால் ஆகியோா் ஏற்றிவைத்தனா்.

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளா் கருவூரான், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் எழில் அரசு, ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் சிவன் மற்றும் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதேபோல பென்னாகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, போடூா் நான்கு சாலை சந்திப்பு மற்றும் பாப்பாரப்பட்டி பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் மே தினத்தை கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com