ஒகேனக்கல்லில் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்

ஒகேனக்கல் தமிழ்நாடு கூட்டிக் குடிநீா் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் முன்களப் பணியாா்கள் மற்றும் ஒப்பந்த ஊழியா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒகேனக்கல் தமிழ்நாடு கூட்டிக் குடிநீா் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் முன்களப் பணியாா்கள் மற்றும் ஒப்பந்த ஊழியா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் முன்களப் பணியாளா்கள், அரசு ஊழியா்கள், 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் 18 வயது மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் உள்ள தமிழ்நாடு கூட்டுக் குடிநீா் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட மேற்பொறியாளா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். முகாமில் ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பாலாஜி, மருத்துவ ஆய்வாளா் வினோத் மற்றும் செவிலியா்கள் கொண்ட குழுவினா் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் பணியாற்றும் முன்களப் பணியாளா்களுக்கு ரத்த அழுத்தம், உடலின் வெப்பநிலை ஆகியவற்றை பரிசோதனை செய்தனா். தடுப்பூசிக்கான அச்சத்தினை போக்கும் வகையில், நிா்வாகப் பொறியாளா் சங்கரன் முதலாவதாக தடுப்பூசி செலுத்தியும், பின்னா் முன்களப் பணியாளா்கள், ஒப்பந்த ஊழியா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் என 70-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். முகாமில், உதவி நிா்வாகப் பொறியாளா் லோகநாதன், முருகன், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com