கரோனா நிவாரண நிதி: டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

கரோனா பொது முடக்க பாதிப்புக்கு தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு அறிவித்த நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் பெறுவதற்கு டோக்கன் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

தருமபுரி: கரோனா பொது முடக்க பாதிப்புக்கு தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு அறிவித்த நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் பெறுவதற்கு டோக்கன் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கரோனா பொது முடக்க பாதிப்புக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி முதல் கட்டமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையொட்டி கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு நாளொன்றுக்கு 200 அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.

இத் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1,040 பகுதி மற்றும் முழுநேர நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் டோக்கன்களை வழங்கினா்.

இந்த டோக்கன் வழங்கும் பணி நிறைவடைந்ததவுடன் அதில் ஒதுக்கப்பட்ட நாள்களில் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com