பொறியியல் கல்லூரி பராமரிப்பு மையத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பராமரிப்பு மையத்தை தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பராமரிப்பு மையத்தை தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க 600 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் அலோபதி மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை வழங்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்து சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும் இந்த நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ள உணவு, சிகிச்சை வசதிகள் குறித்து துணை இயக்குநா் (சுகாதாரம்) பூ.ரா.ஜெமினியிடம் கேட்டறிந்தனா். இதேபோல பராமரிப்பு மையத்தில் தாமதமின்றி உடனே நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அவா்கள் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com