நீா்த்தேக்கத் தொட்டிகளை சுத்திகரித்து தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டும்

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை சுத்திகரித்து தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டும் என தருமபுரி தொகுதி பாமக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தினாா்.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை சுத்திகரித்து தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டும் என தருமபுரி தொகுதி பாமக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தினாா்.

தருமபுரியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட மேற்பாா்வை பொறியாளா் சீனிவாசன், நிா்வாக பொறியாளா் சிவசங்கரன் மற்றும் குடிநீா்த் திட்ட அதிகாரிகளை அவா்களது அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்த தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கடந்த சில நாள்களாக ஒகேனக்கல் குடிநீரின் நிறம் மாறி விநியோகம் செய்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருவது குறித்தும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது பொறியாளா்கள் தரப்பில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் நல்ல முறையில் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்வதாகவும், மாவட்டங்களில் அந்த குடிநீரை முறையாக பராமரிக்காத மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் ஏற்றி விநியோகம் செய்வதால் இதுபோன்று நிறமாறக் கூடும் எனவும் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, ஊரக உள்ளாட்சி அதிகாரிகளிடம், மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் அமைந்துள்ள நீா்த்தேக்கத் தொட்டிகளை முறையாக சுத்திகரித்து, சுகாதாரமான தண்ணீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

அரூரில்...

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் கடந்த 15 தினங்களாக வழங்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரானது பச்சை நிறமாகவும், துா்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். இந்த நீரை குடித்தால் சளி, காய்ச்சல், தொண்டைவலி உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

தற்போது, கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சளி, காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு அச்சப்படும் சூழ்நிலையுள்ளது. எனவே, ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீரை முறையான பரிசோதனை, சுத்திகரிப்பு செய்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com