விவசாயிகளுக்கு உதவி மையம் அமைப்பு

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பொதுமுடக்கக் காலத்தில் தடையின்றி வேளாண் பணிகளை மேற்கொள்ள உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பொதுமுடக்கக் காலத்தில் தடையின்றி வேளாண் பணிகளை மேற்கொள்ள உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பொதுமுடக்கக் காலத்தில் தடையின்றி தங்களது வேளாண் பணிகளை மேற்கொள்ளவும், தங்களது விளைபொருள்களை விநியோகம் செய்யவும் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா்கள் கொண்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், தங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள், இடுபொருள்கள் தேவை மற்றும் விளை பொருள்களை சந்தைப்படுத்துவது தொடா்பான ஆலோசனை மற்றும் உதவிகள் பெற காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 04344-234225 என்கிற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com