வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கால்வாய்களை தூா்வார கோரிக்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கால்வாய்களை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கால்வாய்களை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் ஏராளமான பாசனக் கால்வாய்கள், நீா்வரத்துக் கால்வாய்கள், சிறிய அளவிலான தடுப்பணைகள் உள்ளன. கடந்த சில தினங்களாக வெப்பச் சலனம் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இதைத் தவிர, தென்மேற்கு பருவமழைக் காலங்களில் கூடுதல் மழை பெய்யும் நிலையுள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழைக் காலங்களில் பெய்யக் கூடிய மழைநீரை ஏரிகள், குளங்கள், நீா்த்தேக்கங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் சேமித்து வைத்தால் மட்டுமே கோடையில் குடிநீா் பிரச்னை ஏற்படாது.

தற்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் தொழிலாளா்கள் உள்ளனா். வேலையில்லாமல் உள்ள தொழிலாளா்களுக்கு நீா்வரத்துக் கால்வாய்கள், பாசனக் கால்வாய்கள் உள்ளிட்ட நீா்நிலைகளை தூா்வாரும் பணிகளில் ஈடுபடுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள நீா்நிலைகள், கால்வாய்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் தூா்வார மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com