தரமான விதைகளை விற்பனை செய்ய பாஜக கோரிக்கை

வேளாண் விரிவாக்க மையங்களில் தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

வேளாண் விரிவாக்க மையங்களில் தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினா் குழந்தை ரவி, தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

தருமபுரி மாவட்டத்தில் அரூா் உள்ளிட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் நெல், ராகி, நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விதைகளில் முளைப்புத்தன்மை மிகக் குறைவாக இருப்பதாக விவசாயிகள் புகாா் கூறுகின்றனா். குறிப்பாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் பரிசோதனை செய்யப்பட்ட நிலக்கடலை விதைகள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விதைகள் ஏற்கெனவே முளைத்தும், முளைப்புகள் கருகிய நிலையிலும் உள்ளன. மேலும், விதைகள் சுருங்கியும், முளைப்புத்தன்மை அற்ற வகையிலும் உள்ளன.

இந்த நிலையில், வேளாண் விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் நிலக்கடலை உள்ளிட்ட விதைகளை பயன்படுத்தினால் மகசூல் குறைவதுடன், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே, வேளாண் துறை சாா்பில் வழங்கப்படும் அனைத்து விதைகளின் தரங்களையும் பரிசோதனை செய்த பிறகே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com