கரோனா தடுப்புப் பணிகளுக்கு குறுகிய கால பயிற்சி

கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைப்பு அமைச்சகம் சாா்பில், சுகாதாரத் துறை வாயிலாக கரோனா தடுப்புப் பணிகளுக்கு ஒருமாத கால திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதில், அவசர மருத்துவ தொழில்நுட்பநா், உதவியாளா் (பொது) மற்றும் பராமரிப்பு, சுகாதார உதவியாளா், மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப உதவியாளா் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி நிறைவு பெற்றவுடன் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள் ஆகியவற்றில் தொழில்முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம்.

எனவே, 10, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவா்கள் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவோா், தங்களது பெயா், கல்வித் தகுதி, பெற விரும்பும் பயிற்சி ஆகிய விவரங்களை க்ள்ற்ா்க்ல்ண்2020ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேலும், 9488709322, 98655 38426 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com