சென்னையிலிருந்து தருமபுரிக்கு ரயிலில் வந்த உரங்கள் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

சென்னையில் இருந்து சரக்கு ரயிலில் தருமபுரிக்கு வந்த யூரியா மூட்டைகள், லாரிகள் மூலம் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து சரக்கு ரயிலில் தருமபுரிக்கு வந்த யூரியா மூட்டைகள், லாரிகள் மூலம் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து சரக்கு ரயில் மூலம் தருமபுரி ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை யூரியா 1,224 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 17:17:17 உரங்கள் 123.600 மெட்ரிக் டன் உரங்கள் வந்து சோ்ந்தது.

இதையடுத்து தருமபுரி மாவட்ட தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு 527.355 மெட்ரிக் டன் யூரியாவும், 17:17:17 காம்ப்ளக்ஸ் உரங்கள் 74 மெட்ரிக் டன்னும், கிருஷ்ணகிரி மாவட்ட தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு 696.645 மெட்ரிக் டன் யூரியாவும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 49.60 மெட்ரிக் டன்னும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தப் பணிகளை தருமபுரி மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) தா.தாம்சன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com