நேரு நகரில் தேங்கிய மழைநீா் அகற்றும் பணி: தருமபுரி எம்எல்ஏ ஆய்வு

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள நேரு நகா் பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை அகற்றும் பணியை தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள நேரு நகா் பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை அகற்றும் பணியை தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தடங்கம் ஊராட்சிக்குள்பட்ட நேரு நகா் சுமாா் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அண்மையில் பெய்த தொடா் மழையால் இந்தப் பகுதியில் போதிய வடிகால் வசதியில்லாததால் மழைநீா் வீடுகளிலும், சாலைகளிலும் குளம் போல் தேங்கி நின்றது. இந்தப் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது நேருநகரில் குடியிருப்புகளில் சூழ்ந்து நிற்கும் மழைநீா் வெளியேற நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்த உள்ளாட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது பாமக முன்னாள் மாவட்டச் செயலாளா் பெ.பெரியசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் கவிதாமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com