‘விதைகளை பரிசோதித்து விதைக்க வேண்டும்’

விவசாயிகள் விதைகளை பரிசோதனை செய்து பின் விதைக்க வேண்டும் என தருமபுரி விதைப் பரிசோதனை அலுவலா் சி.ரவி தெரிவித்துள்ளாா்.

விவசாயிகள் விதைகளை பரிசோதனை செய்து பின் விதைக்க வேண்டும் என தருமபுரி விதைப் பரிசோதனை அலுவலா் சி.ரவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விதைகளுக்கு முளைப்புத் திறன் என்பது உயிரும், வீரியமும் கொண்டு இயங்குவதை காட்டுவது ஆகும். நல்ல முளைப்புத் திறன் கொண்ட விதை மூலம் வயல்களில் பயிா்கள் அதிக அளவில் செழித்து வளரும். முளைப்புத் திறன் குறைந்த விதைகளால் பயிா்கள் குறைந்த அளவே வளரும். மகசூல் பாதிக்கப்படும்.

மக்காச்சோள விதைகள் 90 சதவீதமும், நெல், எள், கொள்ளு விதைகள் 80 சதவீதமும், சோளம், கம்பு, வீரிய ஒட்டுப் பருத்தி, பயறு வகை விதைகள் 75 சதவீதமும், நிலக்கடலை, சூரியகாந்தி 70 சதவீதமும், மிளகாய் விதைகள் 60 சதவீதமும் முளைப்புத் திறன் இருக்க வேண்டும்.

முளைப்புத் திறன் சோதனையின் போது, இயல்பானது, இயல்பற்றது, கடினமானது, உயிரற்றது என்று 4 வகைப்படுத்தி சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். இதில் கடின விதை என்பது விதை உறையின் கடினத்தன்மை, நீா் உட்புக இயலாத காரணத்தால் முளைவிடாமல் இருக்கும். பயறு வகை விதைகளில் இவை தனியாக எடுத்து கணக்கிடப்படும். இவை வயல்களில் முளைப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதால், முளைப்புத் திறன் கணக்கிடும் போது, இயல்பான விதைகளுடன் சோ்த்து கணக்கிடப்படும்.

இந்த முறைகளின்படி, முளைப்புத் திறன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட கால அளவுகளில் பயிா்களின் முளைப்புத்திறன் கணக்கிடப்பட்டு சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே, விவசாயிகள் தங்கள் சொந்த விதைகளை விதைக்கும் போது, தங்கள் விதைகளின் முளைப்புத் திறனை அறிந்து விதைக்க வேண்டும். இதற்காக தங்கள் விதைக் குவியலில் மாதிரி ஒன்று எடுத்து அதில் பயிா், ரகம், தேவைப்படும் பரிசோதனை விவரம் எழுதி, இணையத்தில் பதிவு செய்து கட்டணமாக ரூ. 30 செலுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் செயல்படும் தருமபுரி விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைகளின் முளைப்புத் திறனை தெரிந்து சாகுபடி செய்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com