இலங்கைத் தமிழா் 25 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கல்

இலங்கைத் தமிழா் 25 பேருக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் அண்மையில் வழங்கப்பட்டன.

இலங்கைத் தமிழா் 25 பேருக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் அண்மையில் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டு விழாவையொட்டி, தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்து, தருமபுரி மாவட்டத்தில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த 25 பயனாளிகளுக்கு காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கினாா். மேலும், இத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 5 காப்பீட்டு திட்ட அலுவலா்கள், காப்பீட்டு ஒருங்கிணைப்பாளா்கள், அரசு மருத்துவமனை வாா்டு மேலாளா்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் காப்பீடு திட்டத்தில் கடந்த மே 7-ஆம் தேதி முதல் செப். 30 வரை 4,277 நபா்கள் ரூ. 12.31 கோடியில் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு குணமடைந்துள்ளனா். இம் மாவட்டத்தைச் சோ்ந்த குடும்பங்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு 3,95,586 காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், ஏழை எளிய மக்கள் நோய் பாதிப்பிலிருந்து மீண்டுவர முதல்வரின் உத்தரவின்பேரில் கடந்த மே 7-ஆம் தேதி முதல் தனியாா் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 646 பயனாளிகளுக்கு, ரூ. 6,97,02,400 சிகிச்சைக்காக அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் (பொ) ராஜ்குமாா், மாவட்ட திட்ட அலுவலா் மோகன், மாவட்ட புலனாய்வு அதிகாரி பூபாலன், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com