முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
காரிமங்கலத்தில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினா்
By DIN | Published On : 11th October 2021 02:07 AM | Last Updated : 11th October 2021 02:07 AM | அ+அ அ- |

காரிமங்கலம் பேரூராட்சி பகுதியில் பா.ம.க, திமுக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட 13-ஆவது வாா்டு பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பா.ம.க., திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில் காரிமங்கலம் பேரூா் செயலா் காந்தி, வேலூா் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலா் சரவணபிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.