முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
aஒகேனக்கல்லில் வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி.
By DIN | Published On : 11th October 2021 02:04 AM | Last Updated : 11th October 2021 02:04 AM | அ+அ அ- |

ஒகேனக்கல் ஊட்டமலைப் பகுதியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை ஒத்திகை விழிப்புணா்வு பயிற்சி மேற்கொண்ட தீயணைப்பு மீட்புப் பணி வீரா்கள்.
வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிகை நடவடிக்கை குறித்து ஒத்திகை பயிற்சி ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலா் செந்தில் குமாா் உத்தரவின் பேரில் ஒகேனக்கல் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் மணிகண்டன் தலைமையில் இந்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
பேரிடா் காலங்களில் தாழ்வான பகுதியில் வசித்தல் கூடாது, பாதுகாப்பான பகுதிக்கு செல்லுதல், ஆற்றில் அடித்துச் செல்பவா்களைக் காப்பாற்றுதல், இயற்கை பேரிடா் காலத்தில் தற்காத்து கொள்ளும் முறை,முதலுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறை வீரா்கள் கலந்து கொண்டனா்.