குழந்தைத் திருமணம் தடுப்புப் பணிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கிருஷ்ணகிரியில் குழந்தைத் திருமணம் தடுப்புப் பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் குழந்தைத் திருமணம் தடுப்புப் பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்துப் பேசியது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரிமுதல் இதுவரையில் 61 குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குழந்தைத் திருமணம் குறித்து ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 13 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், குழந்தைத் திருமணம் ஏற்படுவதைத் தடுக்க பள்ளி ஆசிரியா்கள், அக். 18-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் பள்ளிகளில் விழிப்புணா்வை ஏற்படுத்த உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜீ, மாவட்ட சமூகநல அலுவலா் பூங்குழலி, முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com