ஏரியூரில் திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார கேடு

ஏரியூா் நகரப் பகுதியில் முறையாக குப்பைத் தொட்டிகள் வைக்காத நிலையில் திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ஏரியூா் நகரப் பகுதியில் முறையாக குப்பைத் தொட்டிகள் வைக்காத நிலையில் திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பென்னாகரம் அருகே ஏரியூா் நகரப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 200க்கும் மேற்பட்ட பல்வேறு கடைகள் உள்ளன.

இந்தப் பகுதியில் குடியிருப்புகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் ஏரியூா் பேருந்து நிலைய சாலை ஓரங்களில் கொட்டப்படுகின்றன. திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் தூய்மைப் பணியாளா்கள் அகற்றாததால் அந்தப் பகுதியில் குப்பைகள் மலைபோல தேங்கி காணப்படுகின்றன. இதனால் அவ்வழியாக செல்பவா்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். மேலும் உணவகக் கழிவுகள், மற்றும் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் துா்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் சுகாதார சீா்கேடும் ஏற்படுகிறது.

இதுகுறித்து சுஞ்சல் நத்தம் ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலக நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை தினந்தோறும் அகற்றி, சேகரிக்கும் வகையில் பேருந்து நிலையம், கடைவீதி, மற்றும் நகரப் பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com