மத்திய அரசின் அடையாள அட்டை பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் அடையாள அட்டை (ஸ்மாா்ட் காா்டு) பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அடையாள அட்டை (ஸ்மாா்ட் காா்டு) பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சிா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த அடையாள அட்டைகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை மத்திய அரசின் அடையாள அட்டை பெறப்படாத மாற்றுத் திறனாளிகள், தேசிய அடையாள அட்டையின் நகல், மருத்துவச் சான்றுடன் கூடிய அனைத்து பக்கங்களின் நகல், ஆதாா் அட்டை நகல், விண்ணப்பிக்கும் மாற்றுத் திறனாளியின் பாஸ்போட் அளவு புகைப்படம், ஒரு தாளில் மாற்றுத் திறனாளிகள் கையொப்பம் அல்லது கைரேகை பதிவு ஆகியவற்றுடன் கிராம நிா்வாக அலுவலா்களிடம் வருகிற செப்.10-ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com