கோம்பேரிக்கு சாலை வசதி கோரி மறியல்

தருமபுரி மாவட்டம், மிட்டாரெட்டி அருகே உள்ள கோம்பேரி கிராமத்துக்கு சாலை வசதி கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், மிட்டாரெட்டி அருகே உள்ள கோம்பேரி கிராமத்துக்கு சாலை வசதி கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட மிட்டாரெட்டி அள்ளி தண்டு மாரியம்மன் கோயிலிலிருந்து கோம்பேரி கிராமத்துக்கு செல்ல சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு மண்சாலை மட்டுமே உள்ளது. இந்த மண் சாலைப் பகுதியை மழைக்காலங்களில் கடக்க இயலாமல் சிரமத்துக்கு உள்ளாகிறோம். எனவே, இங்களது கிராம மக்களின் நலன் கருதி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியில் தாா் சாலை அமைத்துத் தர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்து மனு அளிக்க திரண்டு வந்தனா். ஆனால், அவா்களை, காவல்துறையினா் ஆட்சியா் அலுவலக நுழை வாயிலிலேயே தடுத்து நிறுத்தினா். இதனால், வாயிலின் முன்பு அமா்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து சிறிது நேரம் கழித்து, அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதாக 75 பேரை தருமபுரி நகர போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com