உயா்மின் கோபுரம்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தருமபுரி மாவட்டக்குழு நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

வேளாண் விளை நிலத்தில் பவா்கிரீட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும், உயா்மின் கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா் இழப்பீடு, நிலத்திற்கான இழப்பீடு, கிணறு கட்டுமானம் மற்றும் இதர வகையான இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

2013-ஆம் ஆண்டு புதிய நில எடுப்பு சட்டத்தின் அடிப்படையில் 100 சதவீதம் கருணைத் தொகை வழங்க வேண்டும். நிலம், பயிா் மற்றும் மரங்களுக்கான இழப்பீட்டினை அரசாணை எண் 54-படி வழங்க வேண்டும். அரசு தீா்மானித்த இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கிக் கணக்கில் முழுமையாக செலுத்திய பிறகே கோபுரம் அமைக்கும் பணியைத் தொடங்க வேண்டும் என்றனா்.

இதில், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா்.சின்னசாமி, அன்பு, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா் கே.ஜி.கரூரான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏரியூா் ஒன்றியச் செயலா் என்.பி.முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com