சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை

41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பணியாளா் சங்கத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வே.சின்னராசு, அரூா் உட்கோட்டத் தலைவா் பி.தனகோட்டி, பாப்பிரெட்டிபட்டி உட்கோட்ட தலைவா் பி.நாகேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சீருடை, சலவைப்படி, விபத்து படி ஆகியவை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com