பட்டு வளா்ப்பில் ஈடுபட விவசாயிகள் முன்வர வேண்டும்

பட்டு வளா்ப்பில் ஈடுபட விவசாயிகள் முன்வர வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

பட்டு வளா்ப்பில் ஈடுபட விவசாயிகள் முன்வர வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பு அருகேயுள்ள அரசு பட்டுக்கூடு அங்காடியை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, செட்டிக்கரையில் உள்ள பட்டு விவசாயி மகேந்திரன் என்பவரின் மல்பெரி தோட்டம், அங்கு நடைபெறும் புழு வளா்ப்புப் பணிகள், மதிகோன்பாளையத்தில் உள்ள பிரகாஷ் பட்டு நூற்பு மையம் ஆகியவற்றை பாா்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து பணியாளா்கள், விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் 3526.80 ஏக்கரில் 2,174 பட்டு விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்து பட்டுத்தொழில் மேற்கொண்டு வருகின்றனா். தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ஒரு கிலோ வெண்பட்டு கூடுகள் தற்போது ரூ. 550 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் பட்டுத்தொழில் மேற்கொண்டு பொருளாதார மேம்பாடு அடைந்திட வேண்டும். ஏனைய பயிா்கள் போலன்றி மல்பெரி பயிா் மாதந்தோறும் வருமானம் தரக்கூடியது. இத்தொழிலில் மிகவும் குறைவான ஆள்களைக் கொண்டு எளிதில் பணிகளை முடித்து நல்ல லாபம் பெறலாம் என்றாா்.

இந்த ஆய்வின் போது, தருமபுரி மண்டல இணை இயக்குநா் எஸ்.ரமேஷ், உதவி இயக்குநா் மா.முருகன், பென்னாகரம் உதவி இயக்குநா் இரா.வில்சன் மற்றும் பட்டு வளா்ச்சித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com