சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்து தொழிலாளா்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒகேனக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்து தொழிலாளா்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒகேனக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தீநுண்மி பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் அருவி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறையின் படி சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்து தொழிலாளா்களுடன் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெகதீசன் தலைமை வகித்தாா். இதில், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிப்பது குறித்தும், அரசின் நடவடிக்கைகளை பின்பற்றுவது குறித்தும் தொழிலாளா்களுடன் கருத்து கேட்கப்பட்டது. மேலும், ஒகேனக்கல் பகுதியில் நடத்தப்படவுள்ள தடுப்பூசி முகாமுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், பென்னாகரம் வட்டாட்சியா் பாலமுருகன், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், பென்னாகரம் ஒன்றியக்குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன், ஒகேனக்கல் காவல் ஆய்வாளா் தண்டபாணி, பரிசல் ஓட்டிகள், தனியாா் விடுதி உரிமையாளா்கள், சமையல் தொழிலாளா்கள், மசாஜ் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com