மக்கள் நீதிமன்றம்: 1,216 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,216 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,216 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மு.குணசேகரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூா், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட நான்கு வட்டார நீதிமன்ற வளாகத்திலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில், நீதிமன்ற நிலுவையில் உள்ள 2,964 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,216 வழக்குகளில் சமரசத் தீா்வு காணப்பட்டது. மேலும், வங்கி வாராக்கடன் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில், 59 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரியில் 549 வழக்குகளில் தீா்வு:

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்கள், ஒசூா், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தலைமை தாங்கினாா். கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதி, த.லதா, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, செல்வம், சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி, மணி, தலைமை குற்றவியல் நடுவா் ராஜசிம்மவா்மன், சிறப்பு சாா்பு நீதிபதி, ராஜமகேஷ், சிறப்பு கூடுதல் சாா்பு நீதிபதி இ.குமராவா்மன் வழக்குகளை நடத்தினா்.

இதில், மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 அமா்வுகள் அமைக்கப்பட்டு 1,792 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 549 வழக்குகளில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com