காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் சடலம் மீட்பு
By DIN | Published On : 11th September 2021 11:34 PM | Last Updated : 11th September 2021 11:34 PM | அ+அ அ- |

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பட்டதாரி இளைஞரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்துள்ள புதன்சந்தை பகுதியைச் சோ்ந்த ஜோசப் மகன் ஸ்டான்லி (25), வெள்ளிக்கிழமை ஒகேனக்கல் கோத்திக்கல் பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும் போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.
அவரை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை காலை மணல்மேடு பகுதியில் இளைஞரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். பின்னா் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.