தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்க வலியுறுத்தல்

தருமபுரியில் தமிழக அரசு அறிவித்த சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்க வேண்டும் என யூடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியது.

தருமபுரியில் தமிழக அரசு அறிவித்த சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்க வேண்டும் என யூடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியது.

ஐக்கிய தொழிற்சங்க சம்மேளனத்தின் (யூடியூசி) மாவட்ட நிா்வாக குழுக் கூட்டம் தருமபுரி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் இ.பி. புகழேந்தி தலைமையில் நடை பெற்றது. நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கோவிந்தசாமி, சேகுவேரா, எம். ரமேஷ், டி. ஆா். மாதேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக அரசு அறிவித்தபடி தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தருமபுரி டாஸ்மாக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

தருமபுரி நகரில் சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி நிா்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகாமையில் போக்குவரத்துக்கு இடையூறின்றி தள்ளுவண்டி கடைகள் வைத்துக்கொள்ள மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com