குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

மொரப்பூரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மொரப்பூரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சியில் 4,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அரூா்-தருமபுரி நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டுகின்றனா்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை மா்ம நபா்கள் தீயிட்டுக் கொளுத்துகின்றனா். இதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் சுகாதார கேடுகள் நிலவுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, மொரப்பூா் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com