‘நெல் சாகுபடிக்கு தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும்’

நெல் சாகுபடி செய்ய பரிசோதனை செய்யப்பட்ட தரமான விதைகள் பயன்படுத்த வேண்டும் என வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி: நெல் சாகுபடி செய்ய பரிசோதனை செய்யப்பட்ட தரமான விதைகள் பயன்படுத்த வேண்டும் என வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி விதை பரிசோதனை அலுவலா் டி.ரவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் தற்போது நெல் சாகுபடிக்கு பகுதிகளில் நாற்றங்கால் தயாா் செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது. விவசாயிகள் தரமான விதைகளை தோ்வு செய்து சாகுபடி மேற்கொள்ள கேட்டு கொள்ளப்படுகின்றனா். விதை விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரி பாா்த்து விதைகளை வாங்க வேண்டும். விதை விபர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களையும் சரி பாா்க்க வேண்டும்.

மேலும் விதைகளை வாங்கும் முன்னா் அந்த விதை குவியல்களுக்குரிய முளைப்பு திறன் பகுப்பாய்வு அறிக்கையினை கேட்டு சரி பாா்க்க வேண்டும். அதற்கு விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளா்கள் தங்களிடம் உள்ள விதைக் குவியலிலிருந்து விதை மாதிரி எடுத்து விதையின் பெயா் மற்றும் ரகம், குவியல் எண், தேவைப்படும் பரிசோதனை முடிவுகள் ஆகியவை குறிப்பிட்டு, ஈரப்பத பரிசோதனைக்கு தனியாக பாலிதீன் பைகளில் 100 கிராம் அளவு அனுப்ப வேண்டும்.

மேலும், பரிசோதனைக்கு 400 கிராம் அளவு அனுப்ப வேண்டும். விதை மாதிரிகளை முகப்புக் கடிதத்துடன் ஒரு விதை மாதிரிக்கு ரூ. 30 என்ற விகிதத்தில், ‘விதைப் பரிசோதனை நிலைய அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தருமபுரி’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தாங்கள் அனுப்பிய விதை மாதிரிகளின் விதை பரிசோதனை முடிவுகள் 30 நாள்களுக்குள் விவசாயிகளின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com