கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை

பொதுமக்கள் யாரும் தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் தெரிவித்தாா்.

தருமபுரி: பொதுமக்கள் யாரும் தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் முகாமில் ஆய்வு மேற்கொண்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் இருப்பில் இருந்த கரோனா தடுப்பூசிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு விட்டன. எனவே, தமிழகத்தில் தற்போது தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. மத்திய அரசிடம் இருந்து புதிதாக தடுப்பூசிகள் வந்த பிறகே மீண்டும் தடுப்பூசிகளைச் செலுத்த இயலும். எனவே, திங்கள்கிழமை (செப். 20-ஆம் தேதி) தமிழகத்தில் எந்தத் தடுப்பூசி மையத்திலும் கரோனா தடுப்பூசிகள் செலுத்த முடியாது என்பதால், பொதுமக்கள் முகாம்களைத் தேடிவந்து சிரமப்பட வேண்டாம். விரைவில் தேவையான மருந்துகள் பெறப்பட்டு மீண்டும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கப்படும் என்றாா். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com