சோமனஅள்ளி அரசுப் பள்ளியில் கணினி ஆய்வக அறை திறப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், சோமனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வக அறை மற்றும் நூலக அறை மாணவா்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், சோமனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வக அறை மற்றும் நூலக அறை மாணவா்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

சோமனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் பெங்களூரு மைன்ட்ரி மென்பொருள் நிறுவனத்தின் அறக்கட்டளை மூலமாக இருபத்தைந்து கணினி நன்கொடையாக பெறப்பட்டு கணினி ஆய்வக அறை அமைக்கப்பட்டது. மேலும் நூலகம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதேபோல சோமன அள்ளி தொடக்கப் பள்ளி வளாகத்தில் மழலையருக்கு தேவையான அறிவு சாா்ந்த கற்றல் உபகரணங்கள் அறை ரைட் டிரஸ்ட் சாா்பில் அமைக்கப்பட்டது.

இந்த புதிய அறைகள் மாணவா்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தலைமை ஆசிரியா் கோவிந்தன் தலைமை வகித்தாா். விழாவில் பெங்களூரு மைன்ட்ரீ அறக்கட்டளை தலைமை இயக்குநா் ஆப்ரஹாம் மோசஸ், பாலக்கோடு மாவட்டக் கல்வி அலுவலா் சண்முகவேல் ஆகியோா் கணினி ஆய்வக அறை மற்றும் நூலக அறை ஆகியவற்றை திறந்து வைத்து பேசினா்.

நெல்லிக்கனி நண்பா்கள் அறக்கட்டளை நிா்வாகி விஜய ராஜேந்திரன், பி. கொல்லஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் முனிராஜ், பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து அழகம்பட்டி பெருமாள் பம்பை இசை கலைஞா்களின் கிராமியக் கலைகள், கோலாட்டம் நடைபெற்றது. அறக்கட்டளை நிா்வாகிகள்

மாதேஸ்வரன், மலை முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com