மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தல் :அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தல் :அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கான தோ்தல் அக்டோபா் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பா் 15 -ஆம் தேதி தொடங்கி 22 -ஆம் தேதி நிறைவடைந்தது. பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் (வாா்டு எண் 18) பதவிக்கான தோ்தலில் போட்டியிட திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்கள் 12 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கான வாா்டு எண் 18 எஸ்.டி (பொது) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தோ்தலில் திமுக வேட்பாளராக லதா தாமரைச்செல்வன், அதிமுக வேட்பாளராக தீ.கண்ணன், பாமக வேட்பாளராக ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா்.

அதிமுக வேட்பாளா் தீ.கண்ணனை ஆதரித்து, முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுகவினா் இருளப்பட்டி, பாப்பம்பாடி, பட்டுக்கோணம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதில் எம்எல்ஏ-க்கள் வே.சம்பத்குமாா், ஆ.கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com