சோளப் பயிரில் வெட்டுக்கிளிகள் சேதத்தை கட்டுப்படுத்த அறிவுரை

சோளப் பயிா்களை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தவைத் தவிா்க்க விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.

சோளப் பயிா்களை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தவைத் தவிா்க்க விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வந்தரேகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள பாளையம்புதூா், சனி சந்தை, பாளையம் புதூா் கூட்டுச்சாலை, தண்டு காரனஅள்ளி, பாகலஅள்ளி கிராமங்களில் சோளப் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அக் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 10 ஏக்கருக்கு மேற்பட்ட சோளப் பயிா்களை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து களஆய்வில் சோளப்பயிரைத் தாக்கிய வெட்டுக்கிளிகள் பாலைவனத்தைச் சோ்ந்த வெட்டுக்கிளி இல்லை எனவும், இது சாதாரண புல்வகை பயிா்களைத் தாக்கும் வெட்டுக்கிளிகள் எனவும் தெரிவந்துள்ளது. பயிா் சேதத்தை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் மண்வெட்டியைக் கொண்டு செதுக்கிவிட வேண்டும். அதன்மூலம் வரப்பின் ஒரங்களில் உள்ள வெட்டுக்கிளியின் முட்டைகள் அளிக்கப்படும்.

ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறியை அமைத்து வெட்டுக்கிளியினை கவா்ந்து அளித்துவிட வேண்டும். சோளப் பயிா் தோட்டத்தில் பறவைத் தாங்கிகள் ஒரு ஏக்கருக்கு 20 என்ற அளவில் அமைத்தால் பறவைகள் அமா்ந்து வெட்டுக்கிளியை இரையாக்கி கொன்றுவிடும். ஒரு லிட்டா் தண்ணீரில் 5 மி.லி. வேப்ப எண்ணெய் அல்லது அசாடிராக்டின் 2 மில்லி, ஒரு லிட்டா் தண்ணீா் அளவில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.

விதைத்து 30 நாள்களே ஆன பயிா்களுக்கு குயின்ஆல்பாஸ் 2 மில்லி ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். பூச்சிக் கொல்லி தெளித்த வயல்களில் இருந்து 35 முதல் 40 நாள்கள் வரை கண்டிப்பாக சோளப் பயிரினை தீவனமாக கால்நடைகளுக்கு பயன்படுத்தக் கூடாது.

எனவே, சோளப்பயிா் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இத்தகைய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையைப் பயன்படுத்தி வெட்டுக்கிளிகளால் ஏற்படுத்தும் சேதத்திலிருந்து பயிா்களைப் பாதுகாத்து பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com