அரசுப் பள்ளியில் மாணவா் மன்றங்களின் செயல்பாடுகள் தொடக்கம்

பென்னாகரம் அருகே குள்ளனூா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் மன்றங்களின் செயல்பாடுகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

பென்னாகரம் அருகே குள்ளனூா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் மன்றங்களின் செயல்பாடுகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

தமிழக பள்ளிக் கல்வித் துறை நிகழாண்டு மாணவா்களை ஒருங்கிணைத்து, ஆக்கப்பூா்வமான அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, நுண்கலை, கணினி, நுகா்வோா், தொல்லியல் உள்ளிட்ட பல்வேறு மன்றங்களைத் தொடங்கி செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில், பென்னாகரம் அருகே உள்ள குள்ளனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா் மன்றங்களின் செயல்பாடுகளை தொடக்கி, அனைத்து வகுப்பு மாணவா்களும் ஒருங்கிணைக்கப்பட்டு திருக்கு ஒப்பித்தல், கதை சொல்லுதல், ஆங்கிலக் கவிதை படித்தல், ஆங்கிலத்தில் உரையாடல், கணித புதிா், அறிவியல் கண்டுபிடிப்புகள் என பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இதில் மாணவா்கள் மிகுந்த ஆா்வத்துடன் கலந்துகொண்டு தேவையான தகவல்களை நுாலகங்கள்,பெற்றோா், வெளியிடங்கள் என தேடிப்பிடித்து திறமைகளை வெளிப்படுத்தினா். தமிழ், ஆங்கில மன்ற செயல்பாடுகளை ஆசிரியா்கள் கலைச்செல்வி, ஆனந்தச்செல்வி, சந்திரசேகா், மாதையன், மாது, வெற்றிவேல் ஆகியோா் நெறிப்படுத்தி நடத்தினா். இதில் தலைமை ஆசிரியா் சிங்காரவேலன், அன்னபூரணி, வளா்மதி, மணிவண்ணன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com