ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை விரைந்து முடிக்கக் கோரி, ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை விரைந்து முடிக்கக் கோரி, ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி, பாரதிபுரத்தில் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மண்டலத் தலைவா் எஸ்.ரவி தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் கே.மணி, மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மண்டல பொதுச் செயலா் சி.நாகராஜன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை விரைந்து முடிக்க வேண்டும். போக்குவரத்துக் கழகத்தை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொலைதூரம் செல்லும் பேருந்துகள் தனியாா் விடுதிகளில் நின்று செல்லக் கூடாது என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com