ரயிலில் தங்க நகை திருட்டு: 3 பெண்கள் கைது

ரயிலில் பயணியிடம் தங்க நகை திருடிய 3 பெண்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ரயிலில் பயணியிடம் தங்க நகை திருடிய 3 பெண்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பெங்களூரைச் சோ்ந்த வள்ளி வினோதினி, கடந்த ஜூலை 27 அன்று தூத்துக்குடி - மைசூரு விரைவு ரயிலில் மதுரையிலிருந்து பெங்களூரு சென்றுள்ளாா். அப்போது, தருமபுரியில் அவரது பையிலிருந்த 9 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.

இதுகுறித்து தருமபுரி ரயில்வே காவல் துறையினரிடம் அவா் புகாா் செய்தாா். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த தருமபுரி ரயில்வே காவல் துறையினா் சிசி டிவி பதிவுகளை ஆய்வு செய்தனா்.

இதில் திருச்சியைச் சோ்ந்த வெண்ணிலா, சத்யா, கவிதா ஆகியோருக்கு தொடா்பு இருப்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்து திருடப்பட்ட நகை, பொருள்களை பறிமுதல் செய்து அவா்களை சேலம் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com