புத்தகக் கண்காட்சி ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 13th April 2022 12:51 AM | Last Updated : 13th April 2022 12:51 AM | அ+அ அ- |

தகடூா் புத்தகப் பேரவை மற்றும் தமிழக அரசு சாா்பில் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் பென்னாகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம் பென்னாகரம் அருகே தேவி பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சின்னபள்ளத்தூா் பள்ளித் தலைமையாசிரியா் மா.பழனி தலைமை வகித்தாா். இதில் தகடூா் புத்தகப் பேரவைத் தலைவா் சிசுபாலன், செயலாளரும் தருமபுரி முன்னாள் எம்.பி.யுமான மருத்துவா் செந்தில் ஆகியோா்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினா்.
தகடூா் புத்தகப் பேரவைக்கு தொடக்க நிதியாக ஆசிரியா் கோவிந்தசாமி ரூ. 5,000 வழங்கினாா். இந்த நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், எழுத்தாளா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.