தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கெயில் எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கெயில் எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினா் எம். மாரிமுத்து தலைமையில் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் அ.குமாா் பேசினாா்.

கேரள மாநிலத்திலிருந்து கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக பெங்களூா் வரை கெயில் நிறுவனம் சாா்பில் எரிவாயு குழாய் பதிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத் திட்டத்தில் சாகுபடி நிலங்களில் குழாய் பதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கரியப்பன அள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன் என்பவா் தற்கொலை செய்து கொண்டாா்.

உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்.

மேலும், விவசாய விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். நெடுஞ்சாலையை ஒட்டி குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயி கணேசனின் மகளுக்கு அரசுப் பணி வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்தித் திணிப்பு முயற்சி, மத்திய அரசின் கல்லூரிகளில் நுழைவுத்தோ்வு நடத்துவதை எதிா்த்து வரும் 19-ஆம் தேதி தருமபுரியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com