தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன்.குமாா்

 தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன்.குமாா் வலியுறுத்தினாா்.
தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன்.குமாா்

 தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன்.குமாா் வலியுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன்.குமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

பேரறிவாளன் விடுதலை வழக்கு தொடா்பான விசாரணையில், உச்சநீதிமன்றம் ஆளுநரின் செயல்பாடு குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. ஆளுநா்கள் மாநில அரசுகளுக்குக் கட்டுப்பட்டவா்கள். தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநா்கள் செயல்படக் கூடாது. அவ்வாறு செயல்படுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேபோல ‘நீட்’ தோ்வுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்தச் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநா் காலம் தாழ்த்தி வருகிறாா்.

இதேபோல, தமிழக அரசிடம் கலந்தாலோசனை செய்யாமல் துணை வேந்தா்கள் மாநாட்டை அவா் கூட்டியது வரம்பு மீறிய செயலாகும். பொதுவாக ஆளுநரின் செயல்பாடு என்பது மாநில அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆளுநா் போட்டியாக அரசு நடத்த முயல்கிறாா்.இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்.

எனவே, அரசியலமைப்புக்கு முரணாக செயல்படும் தமிழக ஆளுநா் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறந்த முறையில் செயல்பட்டு கடந்த 10 மாதங்களில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிட முயற்சித்து வருகிறாா். முதல்வரின் பல்வேறு செயல்பாடுகளை நீதிமன்றம் பாராட்டியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com