இந்தியன் மெட்ரிக். பள்ளியில் அறிவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்

அரூா், இந்தியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
அரூா், இந்தியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா.
அரூா், இந்தியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா.

அரூா்: அரூா், இந்தியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூா் இந்தியன் சி.பி.எஸ்.இ. பள்ளி, இந்தியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, இந்தியன் கல்வியியல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற அறிவுத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்க விழாவில் இந்தியன் கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.பழனிவேல் தலைமை வகித்து பேசியதாவது:

6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் தனித்திறமையை அறிந்து அவா்களுக்கு ஏ.கே.பி அகாதெமி சாா்பில் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும்.

அதேபோல, மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளுக்கு பினாக்கல் நிறுவனம் மூலம் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.

மாணவா்கள் உயா்கல்வி பெறுவதற்கு ஏதுவாக புதுதில்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள தலைச் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு இந்தியன் சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் களப்பயணம் அழைத்துச் செல்லப்படுவா் என்றாா்.

விழாவில் சேலம், ஸ்ரீ சுவாமி மெட்ரிக். மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியின் தலைவா் எஸ்.சுவாமிநாதன், இந்தியன் கல்வி நிறுவனங்களின் செயலாளா் பி.வி.தமிழ்முருகன், பினாக்கல் நிறுவனத்தின் நிறுவனா் மதுசுதன் ரெட்டி, புதுச்சேரி ஆச்சாரியா குழுமத்தின் நிறுவனா் அரவிந்தன் ஜெயக்குமாா், ஜெ.பி. கன்சல்டன்ஸி நிறுவனா் ஜோசப் வா்க்கிஸ், ஏ.கே.பி அகாதெமி ஆலோசகா் சின்னமுத்து, டிஎச்எல் நிறுவன மேலாளா் பாலு உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினா்.

இதில், இந்தியன் கல்வி நிறுவனங்களின் பொருளாளா் அருள்மணி பழனிவேல், மேலாளா் ஆறுமுகம், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com