முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
தீா்த்தகிரீஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 29th April 2022 10:28 PM | Last Updated : 29th April 2022 10:28 PM | அ+அ அ- |

அரூரை அடுத்த தீா்த்தமலை தீா்த்திகிரீஸ்வரா் கோயில் குடமுழுக்கு மற்றும் திருப்பணிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீா்த்தமலையில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில். இக் கோயில் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த திருக்கோயிலில் திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், தீா்த்தமலையில் உதவி ஆணையா் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள் பலா் கோயில் திருப்பணிக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலும் நிதியுதவி செய்வதாக தங்களது வாக்குறுதிகளை பத்திரம் வழியாக எழுதிக் கொடுத்தனா். அதேபோல, பக்தா்கள் பலரும் தங்களது பங்களிப்பை கோயில் திருப்பணிக்கு வழங்குவதாக உறுதி அளித்தனா்.
ஆலோசனைக் கூட்டத்தில் தொல்லியல் துறை அலுவலா் செல்வராஜ், உதவி செயற்பொறியாளா் பாலகங்காதரன், செயல் அலுவலா் சரவணகுமாா், பக்தா்கள் கலந்து கொண்டனா்.