முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
மன வளக் கலை மன்ற 35 ஆண்டு தொடக்க விழா
By DIN | Published On : 29th April 2022 10:30 PM | Last Updated : 29th April 2022 10:30 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் மன வளக் கலை மன்றத்தின் 35-ஆம் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
திண்டுக்கல் உலக சமுதாய சேவா சங்கத்தின் இயக்குநா் விவேகானந்தன் சிறப்புரை ஆற்றினாா். மன வளக் கலை மன்றத் தலைவா் சண்முகம், மூத்த பேராசிரியா் மகாலிங்கம், மன வளக் கலை மன்ற பொறுப்பாளா்கள் குமாா், வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழாவில் உலக அமைதி வேண்டி வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. மேலும், பள்ளி மாணவா்களுக்கு தனி மனித ஒழுக்கம், மேம்படுத்த 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு மன வளக் கலை மன்றத்தில் கற்பிக்கப்படும் காயகல்ப பயிற்சி, எளியமுறை உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை கற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.