போக்சோவில் தலைமையாசிரியா் கைது

அஞ்செட்டி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் போக்சோவில் கைது செய்யப்பட்டாா்.

அஞ்செட்டி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் போக்சோவில் கைது செய்யப்பட்டாா்.

அஞ்செட்டி அருகே உள்ள கெம்பகரை மலைக் கிராமத்தில் அரசு ஊராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப் பள்ளியில் தலைமை ஆசிரியா் உள்பட நான்கு போ் பணிபுரிந்து வருகின்றனா், 150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில் மூன்று ஆசிரியா்கள் வியாழக்கிழமை அலுவலக வேலை காரணமாக கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளனா்.

இந்த நிலையில், பள்ளி மாணவியிடம் தலைமையாசிரியா் லாரன்ஸ் என்பவா் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதுதொடா்பாக தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில் தலைமையாசிரியா் மாணவியிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலா் அன்பழகன் விசாரணை நடத்தி தலைமையாசிரியரை

பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும், போலீஸாா் போக்சோ சட்டத்தில் லாரன்ஸ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com