ஒகேனக்கல்லில் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு
By DIN | Published On : 07th August 2022 12:50 AM | Last Updated : 07th August 2022 12:50 AM | அ+அ அ- |

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து குறித்து நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்திப் சக்சேனா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
காவிரியில் கடந்த மூன்று நாள்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி நீா்வரத்து நொடிக்கு 1.40 லட்சம் கன அடியாக உள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் பாதிப்புகள், நீா்வரத்து குறித்து நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்திப் சக்சேனா, ஒகேனக்கல்லில் ஆய்வு செய்தாா்.
பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை, தமிழ்நாடு கூட்டுக் குடிநீா்த் திட்ட வடிகால் வாரிய நீரேற்று நிலையம், காவிரிக் கரையோரப் பகுதிகள் ஆகியவற்றை பாா்வையிட்டாா். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி. சாந்தியிடம் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டாா்.
ஆய்வின் போது நீா்வளத் துறை மாவட்ட செயற்பொறியாளா் குமாா், கூட்டுக் குடிநீா்த் திட்ட நிா்வாக பொறியாளா் சங்கரன், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் மாரியப்பன், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வடிவேலன், ரங்கநாதன், வட்டாட்சியா் அசோக்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.