எண்ணேகொல்புதூா்- தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம் தொடங்க வலியுறுத்தல்

எண்ணேகொல்புதூா்- தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

எண்ணேகொல்புதூா்- தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் நல்லம்பள்ளி வட்டாரச் செயலாளா் ப.பிரசாத் தலைமையில் தருமபுரியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளா் நா.பெரியசாமி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டு வரும் எண்ணேகொல்புதூா்- தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும்.

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

சனத்குமாா் நதியில் கழிவுநீா்க் கலப்பதை தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அலியாளம் தடுப்பணையிலிருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு வரும் இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.சின்னசாமி, மாவட்ட துணைச் செயலாளா்கள் கா.சி.தமிழ்க்குமரன், எம்.மாதேஸ்வரன், மாவட்டப் பொருளாளா் சி.மாதையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com