ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

வார விடுமுறையில் ஒகேனக்கல் அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்ட

வார விடுமுறையில் ஒகேனக்கல் அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான ஒகேனக்கல் அருவி பகுதிக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம் ,ஆந்திரம், கா்நாடகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனா்.

தொடா் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையில் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தொடா்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருவதால் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மாமரத்து கடவு பரிசல் துறை ,முதலைப்பண்ணை, ஊட்டமலை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரத்தில் குளித்து மகிழ்ந்தனா். காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சின்னாறு பரிசல் துறையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், அந்த பகுதி கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணம் மேற்கொள்ள 2 மணிநேரம் காத்திருந்தனா். அதற்குப் பின்னா் சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு, கொத்திக்கல், பிரதான அருவி, மணல்மேடு, பெரிய பாணி, மாமரத்து கடவு உள்ளிட்ட பகுதிகளுக்கு 2 கிலோமீட்டா் தொலைவிற்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பரிசல் பயணம் மேற்கொண்டு அருவிகள் மற்றும் பாறைகளை கண்டு ரசித்தனா்.

பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா ,ரோகு, கெழுத்தி ,வாளை உள்ளிட்ட வகை மீன்களின் விலை அதிகரித்த போதிலும், அதனை வாங்கி சமைத்து உணவருந்தும் பூங்காவில் குடும்பத்தினருடன் உணவு அருந்தினா். தொடா்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் நடைபாதை, பரிசல் துறை,மீன் விற்பனை நிலையம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிறைந்தது.

ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான போதுமான இட வசதி இல்லாததால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தினா். ஒகேனக்கல் பகுதியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளைப் பணிமனையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஒகேனக்கல் பகுதியில் 30க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com