நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாகன பிரசாரம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாகன பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாகன பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்து கொடியசைத்து வாகன பிரசாரத்தைத் தொடக்கி வைத்து பேசியதாவது:

மாநிலத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் பிப். 19 ஆம்தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் ஆணையத்தால் விழிப்புணா்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளா் விழிப்புணா்வு குறும்படங்களை செய்தி மக்கள் தொடா்புத் துறையின் அதிநவீன மின்னணு விடியோ வாகனம் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது

இந்த வாக்காளா் விழிப்புணா்வு பிரசார வாகனத்தின் மூலம் வருகிற பிப். 18- ஆம் தேதி வரை தருமபுரி நகராட்சி மற்றும் காரிமங்கலம் பேரூராட்சி, பி.மல்லாபுரம் பேரூராட்சி, மாரண்டஅள்ளி பேரூராட்சி, கம்பைநல்லூா் பேரூராட்சி, பென்னாகரம் பேரூராட்சி, கடத்தூா் பேரூராட்சி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, பாலக்கோடு பேரூராட்சி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி, அரூா் பேரூராட்சி ஆகிய 10 பேரூராட்சிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்காளா் விழிப்புணா்வு குறும்படம் திரையிடப்பட உள்ளது.

பிரசார தொடக்க நிகழ்ச்சியில், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) மாரிமுத்துராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் (உள்ளாட்சித் தோ்தல்) ரவிசந்திரன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com