தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் தேரோட்டம்

அரூரை அடுத்த தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் மாசிமக தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மாசிமக தேரோட்டம்.
தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மாசிமக தேரோட்டம்.

அரூா்: அரூரை அடுத்த தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் மாசிமக தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

ராமா், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல்கால பூஜையை ராமேஸ்வரத்திலும், இரண்டாம் கால பூஜையை தீா்த்தமலையிலும் நடத்தினாா். ஸ்ரீ ராமா், பாா்வதி, குமரக்கடவுள், அக்னிதேவன், அகத்தியா் என பலரும் தவம் செய்த அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளப்பட்ட சிறப்பு வாய்ந்த தீா்த்தமலையின் மாசிமக தேரோட்டம் பிப்ரவரி 17 இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற்ற தேரோட்டத்தில் அருள்மிகு விநாயகா், வடிவாம்பிகை உடனுறை தீா்த்தகிரீஸ்வரா், வடிவாம்பிகை ஆகிய சுவாமிகள் தனித்தனியாக மூன்று தோ்களில் எழுந்தருளினா். தோ் மீது உப்பு, மிளகு, முத்துக்கொட்டை மற்றும் நவதானியங்களைத் தூவி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டனா். பக்தா்களின் வசதிக்காக அரூா், ஊத்தங்கரையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவில் அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், கோட்டாட்சியா் வே.முத்தையன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஏ.ஆா்.பிரகாஷ், செயல் அலுவலா் ந.சரவணக்குமாா், திருக்கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com